அக்.18 முதல் அட்டவணைப்படியான உள்நாட்டு விமான போக்குவரத்தை துவக்க மத்திய அரசு அனுமதி

0 1767
அக்.18 முதல் அட்டவணைப்படியான உள்நாட்டு விமான போக்குவரத்தை துவக்க மத்திய அரசு அனுமதி

வரும் 18 ஆம் தேதி முதல், அட்டவணைப்படியான உள்நாட்டு விமானப் போக்குவரத்தை துவக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விமானங்களில் பயணியரை அனுமதிப்பதற்கான கட்டுப்பாடுகளும் முழுமையாக நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், விமான நிறுவனங்களும், விமான நிலைய நிர்வாகங்களும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டல் நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் விமானப் போக்குவரத்து மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பின்னர் அதில் சலுகைகள் வழங்கப்பட்டு, கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த போக்குவரத்தில் 85 சதவிகித விமானங்களை இயக்க தற்போது அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments