நிலக்கரி தட்டுப்பாட்டை போக்குவது குறித்து பிரதமர் மோடியுடன், அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆலோசனை
நிலக்கரி தட்டுப்பாடு குறித்து பீதி அடையத் தேவையில்லை என்று மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளதால், நிலக்கரியை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகலாத் ஜோஷி, கனமழையால் நிலக்கரி சுரங்க பணிகளில் பாதிப்பு மற்றும் நிலக்கரி விலை உயர்வால் இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஆகியவையே நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்றார்.
மாநிலங்களுக்கு நிலக்கரியை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Comments