காஞ்சிபுரம் அருகே தி.மு.க பிரமுகர் உடன் திருமணத்துக்கு மீறிய உறவு.. மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவர்
அசோக் லேலண்ட்டுக்குச் சொந்தமான நிலத்துக்கு ரூ.22 லட்சம் முன்பணம் பெற்றதாகப் புகார்..மோசடி நபர்கள் இருவர் கைது
சென்னை திருவொற்றியூரில் அசோக் லேலண்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை விற்க முயன்று, 22 லட்ச ரூபாயை மோசடி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு உத்தண்டராமன் என்பவரை அணுகிய டோக்கியோ மணி என்பவரும் அவருடைய நண்பரான முத்தையா என்பவரும் காமராஜர் நகரிலுள்ள 85 செண்ட் நிலத்தை விற்க உள்ளதாகக் கூறியுள்ளனர்.
ஒன்றரை கோடி ரூபாய்க்கு உத்தண்டராமனிடம் பேரம் பேசி, முன்பணமாக 22 லட்ச ரூபாயை பெற்றுள்ளனர்.
அதன் பின் ஆவணங்களை சரிபார்த்தபோதுதான் அது அசோக் லேலண்ட் நிறுவனத்துக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து உத்தண்டராமன் கொடுத்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Comments