உளுந்து, பச்சைப் பயறு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் - தமிழக அரசு
நடப்பு 2021-22-ஆம் ஆண்டு பருவத்தில், 4000 மெட்ரிக் டன் உளுந்தும், 3,367 மெட்ரிக் டன் பச்சைப்பயறும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
உளுந்துக்கு கிலோ ஒன்றிற்கு ரூபாய் 63/-ம் பச்சைப்பயறு கிலோ ஒன்றுக்கு 72 ரூபாய் 75 காசுகளும் குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படும். கொள்முதலுக்காக கொண்டுவரப்படும் உளுந்து, பச்சைப்பயிரின் ஈரப்பதம் 12 சதவீதத்தில் இருக்குமாறு நன்கு உலர வைத்து, சுத்தம் செய்து, நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருத்தல் வேண்டும்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி 90 நாட்கள் கொள்முதல் மேற்கொள்ளப்படும் என்றும், கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments