மப்பேட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து
திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் 1200 கோடி ரூபாய் முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சென்னை, கோவை உள்ளிட்ட 35 நகரங்களில் பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மப்பேட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்படவுள்ளது.
இதற்கான நிகழ்வில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் ஆகியோர் காணொலி மூலம் பங்கேற்றனர்.
Comments