விஜயதசமி அன்று கோவில்களை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசு முடிவு செய்யும் - சென்னை உயர்நீதிமன்றம்
வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளன்று கோவில்களை திறப்பது குறித்து தமிழக அரசே முடிவு எடுக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், கொரானா இரண்டாவது அலையின் தாக்கம் இன்னும் முழுமையாக குறையவில்லை என்றார்.
ஆயுத பூஜை, விஜயதசமி, மீலாடி நபி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளதால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தளர்வுகள் அளிப்பது குறித்து நாளை தமிழ்நாடு முதலமைச்சர், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதன் முடிவில் தான் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்காது என்று கூறிய நீதிபதிகள், அரசே முடிவு எடுக்கும் என்று தெரிவித்தனர்.
Comments