2 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார், இளையோருக்கு கோவேக்சின் தடுப்பூசி போட வல்லுநர் குழு ஒப்புதல்
2 முதல் 18 வயது பிரிவினருக்கு கோவாக்சின் தடுப்பூசியை போடலாம் என மத்திய அரசின் தடுப்பூசி நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்த பிரிவினரிடம் நடத்தப்பட்ட கோவாக்சின் 3 ஆம் கட்ட பரிசோதனை முடிவுகளை, தடுப்பூசி நிபுணர் குழுவிடம் தாக்கல் செய்துள்ளதாக அதன் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்தது.
அதை ஆராய்ந்த பின்னர், சோதனை முடிவுகள் திருப்திகரமாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதால், 2 முதல் 18 வயது பிரிவினருக்கு அதை செலுத்தலாம் என தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கு தடுப்பூசி நிபுணர் குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் விரைவில் முடிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments