கேரளா, கர்நாடகாவில் மாவோயிஸ்ட் மறைவிடங்களில் ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனை

0 2726

கேரள மாநிலம் நிலம்பூர் வனப்பகுதியில் கடந்த மாதம் 16 ஆம் தேதி மாவோயிஸ்டுகள் நடத்திய பயிற்சி முகாம்கள், ஆயுத பயிற்சி உள்ளிட்டவை தொடர்பாக பதிவான வழக்கில், கேரளா மற்றும் கர்நாடகாவில் 20 இடங்களில்  என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

இன்று காலை முதல் தமிழ்நாடு,கேரளா மற்றும் கர்நாடகாவில் ஒரே நேரத்தில், மாவோயிஸ்டுகளின் மறைவிடம் மற்றும் பயிற்சி மையங்கள் என கருதப்படும் இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இளைஞர்களுக்கு மூளைசலவை செய்து அவர்களிடம் மாவோயிஸ்ட் கருத்துக்களை புகுத்தும் எண்ணத்துடன் பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலும் இந்த சோதனைகள் நடப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்த சில வீடியோக்களும் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த 3 மாநிலங்களிலும் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஆயுதப் போராட்டம் நடத்தும் அமைப்பை ஏற்படுத்த மாவோயிஸ்டுகள் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments