டெல்லியில் போலியான பெயர் மற்றும் ஆவணங்களுடன் தங்கியிருந்த பாக். பயங்கரவாதி கைது..!

0 2111

டெல்லியில் போலியான பெயர் மற்றும் ஆவணங்களுடன் தங்கியிருந்த பாகிஸ்தானை பயங்கரவாதியை, டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

டெல்லி லக்ஷ்மி நகரில் உள்ள ரமேஷ் பார்க்கில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய அந்த நபரை பிடித்த போலீசார், அவனிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி, 60 ரவுண்டுகள் வரை சுடத் தேவையான தோட்டாக்கள், ஒரு கையெறி குண்டு, இரண்டு நவீன கைத்துப்பாக்கிகள் மற்றும் 50 ரவுண்டு புல்லட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இவனது உண்மையான பெயர் முகம்மது அஷரப் என்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த இவன், போலியான ஆவணங்களை தயாரித்து இந்திய அடையாள அட்டைகளை பெற்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பயங்கரவாதி கைது மூலம், தீவிரவாதத் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், அவனது தீவிரவாத திட்டம் மற்றும் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments