ரூ.862 கோடி வங்கி மோசடி: ஐ.டி. நிறுவனம் மீது CBI வழக்கு பதிவு

0 3033

எஸ்பிஐ உள்ளிட்ட தேசிய வங்கிகளில்  862 கோடி ரூபாய் மோசடி செய்ததாக , Trimax IT Infrastructure and Services Ltd என்ற ஐடி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் டேட்டா மையங்களுக்கு ஐடி கட்டமைப்பு வசதிகளை இந்த நிறுவனம் செய்து கொடுத்து வருகிறது. இந்தியாவில் சென்னை உள்ளிட்ட நகரங்களிலும், வெளிநாடுகளிலும் இதற்கு கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் கடந்த 2009 முதல் 2017 வரை எஸ்பிஐ தலைமையிலான 7 வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து சுமார் 862 கோடி ரூபாய்  கடன் பெற்றது.

நிறுவனத்தின் பதிவேடுகளில் முறைகேடு நடத்தி கடன் வசதியை அதிகரித்துக் கொண்ட இந்த நிறுவனம், பெற்ற கடனை திருப்பிச் செலுத்தாமல், போலியான பணப்பரிமாற்றங்கள் வாயிலாக கடன் தொகையை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி மோசடி செய்துவிட்டதாக சிபிஐ தனது வழக்கில் குற்றஞ்சாட்டி உள்ளது.

இதைத் தொடர்ந்து நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களுக்கு சொந்தமான மும்பை, கோலாப்பூர் அலுவலகங்கள், வீடுகள் என 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சூரிய பிரகாஷ் மட்ரெச்சா, இயக்குநர் சந்திர பிரகாஷ் மட்ரெச்சா மற்றும் பெயர் குறிப்பிடாத அரசு மற்றும் வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments