சீனாவை குறை சொல்வதை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - செய்தித்தொடர்பாளர் உய்குர்..!
சீனா மீது குற்றம் சாட்டுவதற்கு முன், மேற்கத்திய நாடுகள் தங்கள் நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
மனித உரிமை பறிக்கப்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறும் நிலையில், சிறுபான்மை உய்குர் இஸ்லாமியர்கள் வாழும் ஜின்ஜியாங்கில் தீவிரவாதம், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக செய்தி தொடர்பாளர் ஜு குயுஜியாங் தெரிவித்தார்.
மேலும் உய்குர் மக்கள் 380 தடுப்பு காவல் மையங்களில் வைக்கபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டதாகவும், ஆனால் ஆய்வில் அவற்றில் பெரும்பாலானவை பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்பு மற்றும் கடைகள் என தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.
Comments