தமிழகத்தில் 3500 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை- அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில், 3500 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில், ஒரு நாள், ஒரு வார்டு திட்டத்தின் கீழ் பசுபதிபாளையம், அருணாச்சல நகர் பகுதிகளில் அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி வீதி வீதியாக சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.
Comments