இஸ்ரேலில் 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தொழிற்சாலை கண்டுபிடிப்பு..!

0 2963

இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலையை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

யாவ்னே நகரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கால்பந்து மைதான அளவில ஒயின் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பூமிக்கு அடியில் நவீன தொழில்நுட்பத்தில் ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏறத்தாழ 2 மில்லியன் லிட்டர் கொள்ளளவு ஒயின் பதப்படுத்தும் வகையில் வசதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பழங்கால மண் குடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments