முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இளைஞரின் உடல்... தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை

0 3165

நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இளைஞரின் உடல் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

சிவகாமிபுரத்தைச் சேர்ந்த ஜெகதீஷுக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த துரைமுருகன் என்பவனுக்கும் ஊர் திருவிழாவின்போது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.கடந்த 5ஆம் தேதி சமரசம் பேசுவதாக துரைமுருகனும் அவனது கூட்டாளிகளும் ஜெகதீஷை காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

மறுநாள் மாலை வரை ஜகதீஷ் வீடு திரும்பாததால், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரித்தபோது, அன்றைய தினம் ஜெகதீஷுக்கு மது வாங்கிக் கொடுத்து, துரைமுருகன் கும்பல் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக ஜோயல் என்பவனை கைது செய்த போலீசார், அவன் கொடுத்த தகவலின்படி, டக்கரம்மாள்புரம் அருகே புதர் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஜகதீஷின் உடலைத் தோண்டி எடுத்தனர். தலைமறைவாகவுள்ள துரைமுருகனையும் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments