கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்
இராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீன்கள் உட்பட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கிய நிலையில், மீன்வளத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
மன்னார் வளைகுடா கீழக்கரை கடல் பகுதி பச்சை நிறத்துக்கு மாறி, துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த நிலையில் அங்கு மீன்கள், கடற்குதிரை, கடற்பல்லி, ஜெல்லி மீன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன.
ஆல்கல்புளூம்' எனும் கடற்பாசி அதிகளவில் உற்பத்தியானதால் கடல் பச்சை நிறத்துக்கு மாறியதாகவும் கடலில் நீரோட்டம் இல்லாததாலும் வெப்பநிலை 34 டிகிரி செல்சியசை தாண்டியதாலும் நீந்திச் செல்ல முடியாத மீன்கள், 'ஆல்கல்புளூம்' கடற்பாசியை உண்டு, அவற்றின் செதில்கள் அடைக்கப்பட்டு, சுவாசிக்க முடியாமல் இறந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
Comments