மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை, குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

0 2392

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் , 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் அபாய அளவான 44 அடியை தாண்டியுள்ளது.

அணைக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதே போல் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73 அடியாக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments