தமிழக அரசின் கையிருப்பில் 2.40 லட்சம் டன் நிலக்கரி; தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை - செந்தில் பாலாஜி
தமிழக அரசின் கையிருப்பில் 2.40 லட்சம் டன் நிலக்கரி இருப்பதாகவும், அனல் மின் நிலையங்களில் முழுவீச்சில் மின்னுற்பத்தி நடைபெறுவதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளொன்றுக்கு 56 ஆயிரம் டன் நிலக்கரியின் தேவை இருப்பதாகவும், தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரி வரவு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனியார் அனல் மின் நிலையங்களிலிருந்து 2 ஆயிரத்து 830 மெகாவாட் பெறப்பட்டு வந்த நிலையில், நிலக்கரி விலை உயர்வு, மழைக்காலத்தில் நிலக்கரி வரத்து குறைவு போன்ற காரணங்களால், 1,300 மெகாவாட் அளவுக்கே தனியார் அனல் மின் உற்பத்தியாளர்கள் வழங்குவதாக செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
நமது அனல்மின் நிலையங்களில் 80% நிலக்கரி உள்நாட்டு உற்பத்தியாகவும், 20% மட்டுமே வெளிநாட்டு நிலக்கரி அதனுடன் கலந்து எரியூட்டப்படுவதால், நிலக்கரி தட்டுப்பாட்டிற்கு வாய்ப்பே இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.
Comments