மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்து, சீரமைக்கும் மாணவர்கள்; பெற்றோர் தரப்பில் பள்ளி நிர்வாகத்துக்கு எழும் கண்டனங்கள்

0 1494

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பள்ளிக் கட்டிடத்தின் மீதுள்ள தண்ணீர் தொட்டியை எவ்விதமான பாதுகாப்பு வழிமுறையையும் பின்பற்றாமல் மாணவர்கள் சுத்தம் செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

எடமணல் ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியின் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை சுத்தம் செய்து, குழாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளில் எவ்வித பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைபிடிக்காமல், மாணவர்களை பள்ளி நிர்வாகம் ஈடுபடுத்துவதகாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான காட்சிகள் வெளியாகி, பெற்றோர் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி நிர்வாகம் உரிய விளக்கமளிக்க மறுத்துவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments