கேரளாவில் மனைவியை கண்ணாடிவிரியன் பாம்பை வைத்து கொலை செய்த வழக்கில் கணவன் குற்றவாளி என தீர்ப்பு..!
கேரளாவில் மனைவியை கண்ணாடிவிரியன் பாம்பை வைத்து கொலை செய்த வழக்கில் கணவன் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2020ஆம் ஆண்டில் கொல்லத்தைச் சேர்ந்த சூரஜ் என்பவர் தனது மனைவி உத்ராவை பாம்பைக் கடிக்க விட்டு கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
கேரளாவையே உலுக்கிய இந்த கொலை வழக்கில் சூரஜ், அவனது பெற்றோர் மற்றும் அவனது சகோதரி மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. கூடுதலாக வரதட்சணை கேட்டு உத்ரா கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், அதன்பின் பாம்பை விட்டு கொலை செய்யப்பட்டதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கொலை வழக்கில் சூரஜை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், தண்டனை விவரங்களை புதன்கிழமை அறிவிக்க உள்ளது.
Comments