அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

0 5443

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம்  காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட மாவட்டங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். நாளையும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ஏனைய மாவட்டங்களில் நாளை மிதமான மழையும்  பெய்ய கூடும். வரும் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை நீடிக்கும். சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.

வரும் 13ஆம் தேதி அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments