மோடியை சர்வாதிகாரியாக எதிர்கட்சிகள் சித்தரிக்கின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா..!
பிரதமர் மோடியின் இமேஜை கெடுக்க வேண்டும் என்பதற்காக அவரை ஒரு சர்வாதிகாரி போல சிலர் சித்தரிப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். ஆனால் மோடி அனைவரின் கருத்துக்களையும் பொறுமையுடன் கேட்பவர் என்றும், தமது கருத்துக்களை திணிப்பவர் அல்ல என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
புதிதாக துவக்கப்பட்ட நாடாளுமன்ற சன்சாத் டிவிக்கு அளித்த பேட்டியில்,மக்களின் ஆதரவு மோடிக்கு மிகவும் உறுதியாக இருக்கிறது என்ற அவர், ஜனநாயகத்தில் இதை விடவும் பெரிய சாதனை எதுவும் இருக்க முடியாது என்றும் கூறினார்.
பலரின் கருத்துக்களையும் கேட்ட பிறகே மோடி எந்த விவகாரத்திலும் இறுதி முடிவை எடுப்பதாகவும் அமித்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Comments