தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை, அடுத்த இரண்டு நாட்களில் மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விலகும் என எதிர்பார்ப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments