இந்திய - சீன கமாண்டர்கள் பேச்சுவார்த்தை தோல்வி..!
லடாக் எல்லை பதற்றம் குறித்து நேற்று நடந்த இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
இந்தக் கூட்டத்தில் எல்லைப் பிரச்சனைகளை தீர்க்க இந்திய தரப்பில் ஆக்கபூர்வமான யோசனைகள் கூறப்பட்டது. ஆனால் அவற்றை ஏற்க மறுத்ததுடன், பதற்றத்தை குறைக்க எந்த விதமான ஆக்கபூர்வ யோசனையையும் தெரிவிக்க சீனா முன்வரவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
சுமார் எட்டரை மணி நேரம் நீண்ட இந்த 13 ஆவது கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் போது, நடைமுறைக்கு சாத்தியமில்லாத கோரிக்கைகள் எழுப்பப்பட்டதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதாக சீன மேற்கு பிராந்திய ராணுவமும் தெரிவித்துள்ளது.
Comments