முதலமைச்சரை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சி பேச்சாளரும் யூட்யூபருமான சாட்டை துரைமுருகன் கைது

0 10010

முதலமைச்சரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் பேச்சாளரும் யுடியூபருமான சாட்டை துரைமுருகன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

கனிம வளக்கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சாட்டை துரைமுருகன், கேரளாவில் மலைகளை குடையவில்லை, ஆனால் தமிழ்நாட்டில் மலைகளை குடைந்து அதை கேரளாவிற்கு கொண்டு செல்கிறார்கள் என்று பேசும்போது, முதலமைச்சரை மிகவும் இழிவாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பின்பு சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தபோது சாட்டை துரைமுருகன், நாங்குநேரி பகுதியில் வைத்து நள்ளிரவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாகக் கூடுதல், தொற்றுநோய் தடுப்புச் சட்ட விதிகளை மீறுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், சாட்டைதுரைமுருகன் பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி தீனதயாளன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். வரும் 25ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து சாட்டை துரைமுருகன் சிறையில் அடைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments