நிலக்கரித் தட்டுப்பாடு மற்றும் மின் உற்பத்தி பாதிப்பு பற்றிய மாநில அரசுகளின் அச்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று - மத்திய அரசு
நிலக்கரித் தட்டுப்பாடு மற்றும் மின் உற்பத்தி பாதிப்பு பற்றிய மாநில அரசுகளின் அச்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோல் இந்தியாவிடம் சுமார் 43 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் 24 நாட்களுக்குத் தேவையை அது பூர்த்தி செய்யும் என்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
அனல் மின் நிலையங்களின் கைவசம் தற்போதுள்ள கையிருப்பு நான்கு நாட்களுக்கு போதுமான அளவுஇருப்பதாகவும் அவர் கூறினார்.இந்த ஆண்டு மின் உற்பத்தி 24 சதவீதம் அதிகரித்துள்ளதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
Comments