கொரோனாவால் நமிதா மாரிமுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகல்

0 12429

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸில் இருந்து கொரோனா காரணமாக போட்டியாளர் ஒருவர் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

நமிதா மாரிமுத்து என்ற திருநங்கை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகியதை அடுத்து, தொற்று பாதிப்பே அதற்கான காரணமாக கூறப்படுகிறது. கடந்த வாரம் திருநங்கைகள் படும் துயரத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க நமிதா மாரிமுத்து பேசியிருந்தார்.

இதனை அடுத்து, பார்வையாளர்கள் மத்தியிலும், இணையதளவாசிகளிடமும் நமிதா மாரிமுத்துவிற்கு ஆதரவு பெருகியது. இந்நிலையில், அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகியதால் பார்வையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

முதலில் மன அழுத்தம் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் தொற்று பாதிப்பால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பிக் பாஸ் வீட்டில் உள்ள பிற போட்டியாளர்களையும் தனிமைப்படுத்த தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments