பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு... கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதரங்களில் ஒன்றான பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக 35 அடி மொத்த உயரம் கொண்ட பூண்டி நீர் தேக்கம் 34 அடியை எட்டியுள்ளது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி நீர்த்தேக்கத்தின் 2 மதகுகள் வழியாக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீரானது கொசஸ்தலை ஆறு வழியாக எண்ணூர் கடலில் கலக்கும். இதனால், கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்கள் மற்றும் இரு புறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் கூடுதல் உபரி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Comments