கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நீடித்தால், இந்திய ராணுவமும் அங்கு நீடிக்கும் - ராணுவ தளபதி நரவனே..!
கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நீடித்தால், இந்திய ராணுவமும் அப்பகுதியில் நீடிக்கும் என ராணுவ தளபதி நரவனே உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா, ராணுவக் கட்டமைப்பையும், உள்கட்டமைப்பையும் மேம்படுத்தி வரும் நிலையில், நரவனே இதனை குறிப்பிட்டுள்ளார். ராணுவ கட்டமைப்பை சீனா மேம்படுத்துவது, அவர்கள் அங்கு நீடிப்பதையை காட்டுகிறது என தெரிவித்த நரவனே, நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உட்கட்டமைப்பு மேம்பாடு, போதியளவில் தளவாடங்கள் உள்ளிட்ட இந்தியப் படைகளின் விரைவான செயல்பாட்டால், சீன ராணுவத்தினரால் எதையும் சாதிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் அண்மையில் தீவிரவாதிகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு கவலை தெரிவித்த நரவனே, இந்த செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் கூறியுள்ளார்.
Comments