ஆதிச்சநல்லூரில் 17 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அகழாய்வு பணி.. தொடங்கி வைத்தார் கனிமொழி

0 5387
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மத்திய தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளை தொடங்கியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மத்திய தொல்லியல் துறையினர்  அகழாய்வு பணிகளை தொடங்கியுள்ளனர்.

இந்த பணிகளை தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைவது மகிழ்ச்சி என்றாலும், ஆய்வு பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 17 கோடி  ரூபாய் போதுமானதாக இருக்காது என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments