பாகிஸ்தான் அணுகுண்டு தந்தை கொரோனாவுக்கு பலி
பாகிஸ்தான் அணுகுண்டின் தந்தை என அறியப்படும் விஞ்ஞானி அப்துல் காதிர் கான் கொரோனாவுக்கு பலியாகி விட்டார். 85 வயதான அவரின் நுரையீரல்கள் கொரோனாவால் முழு பாதிப்புக்கு ஆளாகி, இஸ்லாமாபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
1998 ல் முதன்முறையாக பாகிஸ்தான் அணுகுண்டு சோதனை நடத்த காரணமாக இருந்த அவரை பாகிஸ்தான் மக்கள் ஒரு ஹீரோவாக மதித்து வந்தனர்.
ஆனால் ஈரான், வட கொரியா மற்றும் லிபியாவுக்கு சட்ட விரோதமாக அணுகுண்டு தொழில்நுட்பத்தை வழங்கியதை 2004 ல் அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதை தொடர்ந்து ராணுவ ஆட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளாகி 2009 வரை அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.
Comments