தொடர்ந்து தீப்பிழம்பை வெளியிட்டு மலையடிவாரப் பகுதியை கபளீகரம் செய்த கும்ப்ரே வியஜா எரிமலை..
ஸ்பெயினின் லா பால்மா தீவின் கும்ப்ரே வியஜா எரிமலை தொடர்ந்து தீப்பிழம்பை வெளியிட்டு மலையடிவாரப் பகுதியை கபளீகரம் செய்து வருகிறது.
சென்ற மாதம் செப்டம்பர் 19 ஆம் தேதி வெடித்து சிதற தொடங்கிய எரிமலையால் இதுவரை சுமார் ஆயிரத்து 150 கட்டடங்களும், பல ஏக்கர் விளை நிலங்களும் நாசமாகியுள்ளன.
இதனால் சுமார் 6 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த எரிமலை அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்தாலும் வாழ்நாளில் எப்போதாவது ஒரு முறை நடக்கும் இந்த நிகழ்வை, பாதுகாப்பான இடத்தில் இருந்து பார்ப்பது மகிழ்ச்சியளிப்பதாக இருப்பதாக லா பால்மா தீவுவாசிகள் தெரிவித்துள்ளனர்.
Comments