இன்று முதல் பண்டிகைக் கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
இன்று முதல் பண்டிகைக் கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நவராத்திரி, துர்க்கை பூஜை, தசரா, தீபாவளி உள்ளிட்ட முக்கியப் பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு மக்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க இன்று முதல் அடுத்த மாதம் 21 ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் 5 ஆயிரம் சிறப்பு ரயில்களை இயக்கும் ரயில்வே நிர்வாகம், கொரோனா பாதிப்புகளால் நடப்பாண்டில் ரயில்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது.
இதனிடையே கடந்த 7 ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கியுள்ள தாம்பரம்-நாகர்கோவில் அதிவிரைவு ரயில் சிறப்புக் கட்டணத்தில் இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments