இந்தியா-சீனா இடையே இன்று 13வது சுற்றுப் பேச்சுவார்த்தை.. 17 மாதங்களாக நீடிக்கும் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா..?

0 2295
இந்தியா சீனா இடையே 17 மாதங்களாக நீடிக்கும் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண இன்று 13வது சுற்றுப் பேச்சுவார்த்தை இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்தியா சீனா இடையே 17 மாதங்களாக நீடிக்கும் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண இன்று 13வது சுற்றுப் பேச்சுவார்த்தை இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

கிழக்கு லடாக்கின் மோல்டோ பகுதியில் நடைபெறும் இப்பேச்சுவார்த்தையில் சீனா படைக்குறைப்பு குறித்து இந்திய ராணுவத்தினர் வலியுறுத்துவார்கள் என கருதப்படுகிறது.

சில பகுதிகளில் இருந்து சீனப்படைகள் திரும்பப் பெறப்பட்ட போதும் இன்னும் அதிகளவிலான சீனப்படைகள் லடாக், அருணாச்சலம் உள்ளிட்ட எல்லைகளில் குவிக்கப்பட்டிருப்பதால் இந்தியாவும் அங்கு தனது படைபலத்தை அதிகரித்துள்ளது.

சீனப்படைகள் பின்வாங்காமல் இந்தியப் படைகள் ஒரு அங்குலம் கூட பின்வாங்கப் போவதில்லை என்று ராணுவத் தளபதி நரவானே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments