தமிழகத்தின் 9 மாவட்டங்களில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 73 புள்ளி 27 விழுக்காடு வாக்குகள் பதிவு..
9 மாவட்டங்களில் நேற்று நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் 2ம் கட்டத் தேர்தலில் 73 புள்ளி 27 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகவும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 70 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், விழுப்புரத்தில் 83.6 விழுக்காடும், கள்ளக்குறிச்சியில் 82 விழுக்காடும், வேலூரில் 68 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளது.
ராணிப்பேட்டையில் 75.3 விழுக்காடு வாக்குகளும், திருப்பத்தூரில் 73.5 விழுக்காடு வாக்குகளும் செலுத்தப்பட்டுள்ளன. இரண்டு கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் வருகிற 12 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்ப்பட உள்ளன.
Comments