திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவம், 3ஆம் நாள் விழா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 3ஆம் நாளை முன்னிட்டு மலையப்பசுவாமி முத்துப்பந்தல் அலங்காரத்தில் எழுந்தருளினார். திருமலையில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
3ஆம் நாளான இன்று காலையில், நரசிம்ம அவதாரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண உற்சவர் மண்டபத்தில் யோக நரசிம்ம அவதாரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு ஜீயர்கள் திவ்ய பிரபந்தங்கள் பாடியும், அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்கியும் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மாலைப்பொழுதில், கோவில் வளாகத்தில் உள்ள கல்யாண உற்சவர் மண்டபத்தில், முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த மலையப்பசுவாமிக்கு திவ்ய பிரபந்தங்கள் பாடி ஆரத்தி எடுத்து வழிபாடு செய்யப்பட்டது.
Comments