குஜராத் துறைமுகத்தில் ரூ.21ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் சிக்கிய விவகாரம் - சென்னை தம்பதி வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

0 2545

குஜராத் துறைமுகத்தில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பிடிபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட சென்னை தம்பதியின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஆயிரம் கிலோ ஹெராயின் கடந்த மாதம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த ஹெராயின் தொடர்பாக சென்னையில் தங்கியிருந்த ஆந்திர தம்பதியான சுதாகர் - வைசாலி கைது செய்யப்பட்டனர்.

இந்த போதைப் பொருள் கடத்தலில் தாலிபன்களுக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் நிலையில், வழக்கை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்துள்ளது.

இந்நிலையில், டெல்லி மற்றும் கேரளாவில் இருந்து வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் போரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள ஆந்திர தம்பதி வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments