விபத்துக்குள்ளான அமெரிக்க நீர் மூழ்கி கப்பல்... உலகின் மிக கடுமையான கடலடி சூழலில் பணியில் இருந்ததாக நிபுணர்கள் கருத்து

0 3798

தென் சீன கடல் பகுதியில் சென்ற வாரம் விபத்துக்குள்ளான அமெரிக்க நீர்மூழ்கி கப்பல், உலகின் மிக கடுமையான கடலடி சூழலில் பணியில் இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

USS Connecticut என்ற நீர்மூழ்கி கப்பல் கடலுக்கடியில் இருந்த ஒரு பொருள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சேதமடைந்ததுடன், உள்ளே இருந்த வீரர்கள் பலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. 1998ஆம் ஆண்டு முதல் பணியில் உள்ள 9 ஆயிரத்து 300 டன் எடை, 353 அடி நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கி கப்பல்,அணு சக்தியால் இயங்குவதுடன் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உலகின் சிறந்த நீர்மூழ்கி கப்பல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

உலகின் மிக பரப்பரப்பான கப்பல் போக்குவரத்து மற்றும் மீன்பிடி தொழில் நடக்கும் தென் சீன கடல் பகுதியின் அடிவாரம் எதிர்பாராத மேடு பள்ளங்களுடன் அமைந்துள்ளதால் கடலுக்கடியில் நீர்மூழ்கி கப்பல் ரகசியமாக ரோந்து செல்வது என்பது  மிகவும் கடினமான மற்றும் சவாலான காரியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments