விமர்சனம் செய்த யோகி ஆதித்யநாத்... மீண்டும் தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் விமர்சனத்த தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மறுபடியும் துடைப்பம் மூலம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அண்மையில் உத்தரபிரதேசத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிரியங்கா காந்தி அந்த அறையை துடைப்பத்தால் சுத்தம் செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இது குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், தனக்கு அந்த வேலை மட்டுமே தெரியும் என்று பிரியங்கா புரிந்து கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், லக்னோவில் உள்ள தலித் குடியிருப்புக்கு சென்ற பிரியங்கா அங்கு துடைப்பம் கொண்டு தூய்மைபடுத்தும் பணியில் மீண்டும் ஈடுபட்டார்.
Comments