தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை - ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை..!
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இன்னொரு தீவிரவாதி தப்பிச் சென்று விட்டான்.
தீவிரவாதிகள் பதுக்கி வைத்த ஆயுதக் குவியல்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதியிடமிருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டையில் அவன் பெயர் அகிப் பஷீர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடையவன் என்றும் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தப்பியோடிய தீவிரவாதியைத் தேடி வருகின்றனர்
Comments