ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

0 2062

ஜப்பான் பிரதமராகப் பதவியேற்றுள்ள ஃபுமியோ கிஷ்டாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.

இந்தோ பசிபிக் பகுதியில் இரு நாடுகளும் மிகச்சிறந்த ஒத்துழைப்பை வழங்கி நட்புறவை பலப்படுத்தும் என்று தாம் நம்புவதாக பிரதமர் மோடி அப்போது குறிப்பிட்டார்.

இருநாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாகவும் இருவரும் விவாதித்தனர். இந்தோ பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும்நிலையில், ஜப்பானுடன் நட்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments