8 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த 70 வயது முதியவருக்கு போக்சோ சட்டத்தில் 20 ஆண்டு சிறை

0 3545

கரூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 72 வயது முதியவருக்கு போக்சோ சட்டத்தில் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 70 வயதான நாட்ராயன் என்ற நபர், தின்பண்டம் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளான்.

இது தொடர்பாக போக்சோவில் கைது செய்யப்பட்ட நாட்ராயனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments