ஆக்கிரமிப்பை அனுமதித்தால் குற்றவாளிகள் சட்டத்தை கையில் எடுப்பார்கள் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!
அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை அனுமதித்தால் பேராசைக்காரர்களும், குற்றவாளிகளும் சட்டத்தை கையில் எடுப்பார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான நிலத்தை 9 பேர் ஆக்கிரமித்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையின் போது, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுளது. இதனை அடுத்து, அரசு நிலத்தை ஆக்கிரமித்தது மட்டுமின்றி, கட்டுமானங்களை உருவாக்கி அரசு நிறுவனங்களுக்கே வாடகைக்கு விட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு, நிதி இழப்புகளை வசூலிப்பதற்கான நடவடிக்கையை 6 மாதங்களில் முடிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Comments