குறுஞ்செய்தி, பொய் செய்திகளை நம்பி மக்கள் பணத்தை இழக்க வேண்டாம் - காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் கோரிக்கை

0 2193

சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் மோசடி நபர்களால், மொபைல் மற்றும் வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பப்படும் பொய் செய்திகளை நம்பி மக்கள் பணத்தை இழக்க வேண்டாம் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் ஃபேஸ்புக் அக்கவுண்ட் பிளாக், மொபைல் நம்பர் டீ ஆக்டிவேட், ஆன்லைன் பார்ட்டைம் ஜாப் குறித்து வரும் மெசேஜ் லிங்க்கை கிளிக்செய்யக்கூடாது எனவும், பணம் கட்டச்சொல்லி தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்பை முற்றிலும் தவிர்த்து விடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments