விண்ணிலிருந்து பூமியை ரசிக்க பலூன் சுற்றுலா.. அமெரிக்காவின் வேர்ள்ட் வியூ நிறுவனம் திட்டம்

0 2868

அமெரிக்காவின் World View என்னும் நிறுவனம், சுற்றுசூழலுக்கு உகந்த முறையில் பலூன் தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களை விண் சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது.

வெப்ப காற்றில் இயங்கும் பலூனை போல் இல்லாமல், ஹீலியம் வாயுவை பயன்படுத்தி பலூனை மெல்ல மெல்ல பல ஆயிரம் அடி உயரத்துக்கு பறக்கவிட திட்டமிடப்பட்டுள்ளது.

2024 ஆம் அண்டு முதல் தொடங்கும் சுற்றுலா சேவையில் முற்கட்டமாக சீன பெருஞ்சுவர், எகிப்து பிரமிட், அமேசான் காடுகள் உள்ளிட்ட இடங்களை விண்ணிலிருந்து பார்க்கும் வகையில் பயணங்கள் ஏற்பாடு செய்ய World View திட்டமிட்டுள்ளது.

Virgin Galactic , Blue Origin போன்ற நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலா செல்ல 2 லட்சம் அமெரிக்க டாலர் வசூலிக்கும் நிலையில், பலூனில் சென்று பார்க்க World View நிறுவனம் 50 ஆயிரம் டாலர் நிர்ணயத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments