அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
இந்தாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு 2 பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்சை சேர்ந்த மரியா ரெசா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த டிமிட்ரி முரடோவ் ஆகியோர் நோபல் பரிசுக்கு தேர்வானதாக நார்வே தலைநகர் ஓஸ்லோவில் அறிவிக்கப்பட்டது.
பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்சில் நிலவும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்டவைகளுக்கு எதிராக பத்திரிகைகள் வாயிலாக மரியா ரெசா எதிர்த்து வந்தவர். மேலும் டிமிட்ரி முரடோவ், ரஷ்யாவில் பேச்சு சுதந்திரத்திற்கு ஆதரவாக நின்றவர் என்றும் தேர்வுக்குழு குறிப்பிட்டுள்ளது.
Comments