ஐஐடி கான்பூரில் படிக்க தேர்வாகியுள்ள பங்கில் பெட்ரோல் நிரப்புபவரின் மகள்..! இணையதளத்தில் குவியும் பாராட்டுக்கள்

0 4177

கேரளாவில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் நிரப்புபவரின் மகள், ஐஐடி கான்பூரில் பயில தேர்வாகியுள்ளார்.

பையனூரில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்கில் வேலைசெய்யும் ராஜகோபாலன் என்பவரது மகள் ஆர்யா, ஐஐடியில் எம்.டெக். படிக்க தேர்வானதற்கு இணையதளத்தில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ஆர்யா ராஜகோபாலன் ஐஐடியில் பயில தேர்வானது, அவரது தந்தைக்கு மட்டுமின்றி, நாட்டின் ஆற்றல் துறை சார்ந்த அனைவருக்கும் பெருமையை தேடி தந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் ஆயில் நிறுவனத்திலேயே, தனது மகள் உயர்பதவி பெற்றால் சிறப்பானதாக இருக்கும் என அவரது தந்தை ராஜகோபாலன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments