தைவான் ராணுவத்தினருக்கு அமெரிக்க ராணுவம் பயிற்சி..!

0 2480

அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள், சிறு குழுக்களாக சுழற்சி முறையில்  தைவான் ராணுவத்தினருக்கு போர் பயிற்சி அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பயிற்சி குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுத்துள்ள நிலையில், தைவானை சீன ராணுவத்தின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க அமெரிக்கா சார்பில் வழங்கப்படும் ராணுவ ஒத்துழைப்பு தொடரும் என பென்டகன் செய்தி தொடர்பாளர் John Supple தெரிவித்துள்ளார்.

இது குறித்து தைவானும் கருத்து தெரிவிக்க மறுத்துள்ள நிலையில், அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை, பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரிகள் சொன்னதின் அடிப்படையில் தைவான் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY