இந்தியாவைச் சேர்ந்த வைர- மரகதக் கற்கள் ஏலம் விடப்படுகின்றன..!
இந்தியாவின் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரியவகை வைரம் மற்றும் மரகதக் கற்கள் முதன்முறையாக ஏலம் விடப்படுகின்றன.
முகலாயர் காலத்தைச் சேர்ந்த இந்த ஹாலோ ஆஃப் லைட் என்ற வைரங்களும், கேட் ஆஃப் பாரடைஸ் என்ற மரகதமும் முறையே ஒன்றரை மில்லியன் பவுண்டு மற்றும் இரண்டரை மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலம் போகும் என எதிர்பார்ப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஏல நிறுவனமான சோத்தபைஸ் தெரிவித்துள்ளது.
வைரக் கற்கள் கோல்கொண்டா சுரங்கத்திலும், மரகதம் கொலம்பியா சுரங்கத்திலிருந்தும் வெட்டி எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments