ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

0 2877

சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில் கைதான நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்கும் என்றும் மும்பை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னதாக ஆர்யன் கான் உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு, நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்ப்படுத்தியது. அப்போது, விசாரணையின் போது, வரும் 11-ஆம் தேதி வரை விசாரிக்க வேண்டும் என்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

மேலும், ஆர்யன் கான் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவை, நாளை வெள்ளிக்கிழமை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments