வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் ; பேரணியாக சென்ற விவசாயிகள் மீது கார் மோதியதில் ஒருவர் காயம்
ஹரியானா மாநிலம் அம்பாலா அருகே பேரணியாக சென்ற விவசாயிகள் மீது கார் மோதியதில் ஒருவர் காயமடைந்தார். இதனை அடுத்து, பேரணி மீது குருஷேத்ரா தொகுதி பாஜக எம்பி நயாப் சிங் சைனியின் பாதுகாப்பு வாகனம் மோதியதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நாராயன்கர் பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள், எம்பி நயாப் சிங் மற்றும் மாநில அமைச்சர் சந்தீப் சிங் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்றனர்.
இந்நிலையில் எம்பியின் பாதுகாப்புக்காக சென்ற கார் தங்கள் பேரணி மீது மோதியதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
Comments